கீழமை நீதிமன்றங்களை சேர்ந்த 51 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் : அறிவிப்பாணை வெளியீடு!!

18 April 2021, 11:11 am
Chennai HC -Updatenews360
Quick Share

தமிழ்நாடு கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 51 பேரை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவிப்பாணை வெளியிட்டார்.

சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடி தொடர்பான சிபிஐ வழக்குகளை நீதிபதி ஜவஹர் விசாரித்து வந்தார். தற்போது அவர் கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போல தற்போது சிபிஐ வழக்குகளை விசாரிக்க விஜயலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின முதலாவது நீதிபதி பதவி காலியாக இருந்தது.

தற்போது இரண்டாவது நீதிபதி ரவி முதலாவது நீதிபதியாகவும், விழுப்புரம் மாவட்டம் கூடுதல் நீதிப சிவக்குமார் இரண்டாவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 21

0

0