தமிழகம் முழுவதும் 5வது மெகா தடுப்பூசி முகாம்: கோவையில் இன்று 2 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயம்!!

Author: Aarthi Sivakumar
10 October 2021, 9:40 am
Quick Share

கோவை: கோவையில் 5வது மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது. இன்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 5ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவையை பொறுத்தவரை மாவட்டத்தின்‌ மக்கள்‌ தொகையான 38,67,926 நபர்களில்‌, 18வயது பூர்த்தியடைந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ளவர்கள்‌ என 27,90,400 பேர்‌ கண்டறியப்பட்டுள்ளனர்‌.

இதில்‌ 25,63,212 (91%) நபர்களுக்கு முதல்‌ தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல்‌ 9,22,757 (33%) நபர்களுக்கு இரண்டாம்‌ தவணை தடுப்பூசிகளும்‌ செலுத்தப்பட்டுள்ளது. மேலும்‌, இரண்டாம்‌ தவனைக்கு 3,40,222 நபர்கள்‌ தகுதியுடையவர்களாக உள்ளனர்‌.

இந்நிலையில்‌, இன்று 5வது மெகா தடுப்பூசி வழங்கும்‌ முகாம்‌ நடைபெறுகிறது. ஊரக பகுதிகளில்‌ 1104 முகாம்கள்‌, மாநகரப்பகுதிகளில்‌ 325 முகாம்கள்‌, என மொத்தம்‌ 1429 முகாம்கள்‌ நடைபெறுகிறது.

இம்முகாமில்‌ சுமார்‌ 2 லட்சம்‌ நபர்களுக்கு தடுப்பூசிகள்‌ வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள்‌, இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு காத்திருப்போர்‌ என அனைவரும்‌ இம்முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி பெற்று பயனடைய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன்‌ தெரிவித்தார்‌.

Views: - 129

0

0