பேத்தி வயதில் உள்ள பெண்ணை மணந்த தி.மு.க. நிர்வாகி..! #Couple challenge-ல் டிரெண்டாகும் புகைப்படம்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

22 September 2020, 12:09 pm
dmk mrg - updatenews360
Quick Share

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தன்னை விட 39 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட தி.மு.க. நிர்வாகியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்தும், விமர்சித்தும் வருகின்றனர்.

சாவல்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் மா.சுந்தரேசன். 67 வயதான இவர் 6 முறை சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துள்ளார். தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியான எ.வ. வேலுவின் அதிதீவிர விசுவாசியும் ஆவார். தற்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வரும் அவர், ‘சாவல்பூண்டி சங்கப்பலகை,’ என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பேச்சாளர்களையும் உருவாக்கி வருகிறார்.

அந்த சாவல்பூண்டி சங்கப்பலகை அமைப்பின் மூலம் பேச்சாளராக அறிமுகமானவர்தான் 28 வயது இளம்பெண் அபிதா. பல பட்டிமன்றங்களில் பேசி அசத்திய அபிதாவிடம் தி.மு.க. நிர்வாகி சுந்தரேசனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது.

3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். சுந்தரேசனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, மகன், மகள் உள்ள நிலையில், பேத்தி வயதுள்ள பெண்ணை மீண்டும் மறுமணம் செய்து கொண்டுள்ளதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் #couple challenge-ல் அவர்களின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

தி.மு.க. நிர்வாகியின் இந்த திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். 90ஸ் கிட்ஸ்களின் சாபம் உங்களை சும்மா விடாது எனவும் புலம்பி வருகின்றனர்.

தனது திருமணம் பற்றி மனம் திறந்த சுந்தரேசன் கூறியதாவது:
வயதான காலத்தில், தன் உதவிக்கு ஒருவர் தேவை என, மணியம்மையை, ஈ.வே.ரா., திருமணம் செய்தார். நான் அவரது வழியில் வந்தவன். தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, காலையில் கோபாலபுரம், மாலையில், சி.ஐ.டி., காலனிக்கு செல்வார்.அதுபோல், என் மனைவி தரப்பிலும், அபிதாவின் பெற்றோர் தரப்பிலும் சம்மதம் பெற்று, காதலித்து திருமணம் செய்து, சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறேன். இரு மனைவியரும், அருகருகே தனித்தனியாக வசிக்கின்றனர். இருவர் வீட்டிற்கும் சென்று வருகிறேன், என அவர் கூறினார்.

Views: - 1

0

0