கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் 7 வயது குழந்தை கடத்தல்

10 June 2021, 10:35 pm
Quick Share

கோவை: கோவையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையால் பெண்ணின் 7 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கும் தருமபுரியை சேர்ந்த மோகனாம்பிகை என்பவருக்கும் இன்ஸ்ட்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது. இளம்பெண் கார் வாங்குவதற்காக சரவணக்குமாரிடம் 1.5 லட்சம் பணம் வாங்கியதாகவும், பணத்தை திருப்பி கொடுக்கததை அடுத்து தருமபுரி சென்ற சரவணக்குமார், பெண்ணின் 7 வயது மகனை தூக்கி கொண்டு கோவை வந்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்பதற்காக குழந்தை கடத்தி சென்றது குறித்து தருமபுரி போலீசாரிடம் மோகனாம்பிகை புகார் நேற்றிரவு கொடுத்துள்ளார்.

இன்று காலை கோவை வந்த தரும்புரி போலீசார் வடவள்ளி போலீசார் உதவியுடன் சரவணக்குமாரை கைது செய்து சிறுவனை மீட்டனர். சிறுவன் மற்றும் சரவணக்குமார் ஆகியோரை தரும்புரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். இது சம்பந்தமாக வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ள இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பணத்திற்காக குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 124

0

0