7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமுகன் : அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்..!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2021, 10:20 am
Child Harrasment - Updatenews360
Quick Share

கோவை : 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 2 லட்சம் இழப்பீடும் வழங்க கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவையில் கடந்த 2019ஆம் ஆண்டு 7 வயது சிறுமியின் பெண் உறுப்பிலிருந்து ரத்தம் வரவே, அச்சமடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, சிறுமி பாலியல் வன் கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

பின்னர் தகவலறிந்த கோவை மாநகர் மேற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த மீன் பிடிக்கும் வேலை செய்து வரும் செந்தில் பிரபு என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தததையடுத்து, செந்தில் பிரபு மீது போக்சோ பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், செந்தில் பிரபுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 20 ஆயிரம் அபாதரம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடும் வழங்கவும் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, செந்தில் பிரபு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை பெற்ற செந்தில் பிரபு மீது கோவை மாநகர காவல் நிலையத்தில் 10 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 214

0

0