ஒரு வாரமாக 7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் : போக்சோவில் கைதான போலீஸ்!!

17 January 2021, 7:54 pm
Harassent Arrest - Updatenews360
Quick Share

சிவகங்கை : காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு ஒருவாரமாக பாலியல் தொந்தரவு கொடுத்த ஐ.ஜி அலுவலக பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன் நகர் பகுதியில் வசிப்பவர் மதுரை ஐ.ஜி அலுவகத்தில் அமைச்சு பணியாளராக (டைப்பிஸ்ட்டாக ) பணிபுரிந்து வருபர் பாலாஜி (வயது 40).

இவர் தனது வீட்டு அருகில் வசிக்கும் 7 வயது சிறுமியை பொம்மை துப்பாக்கியை காட்டி தாய் தந்தையை கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இன்று 7வயது சிறுமியை காலை பாலாஜி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து பாலாஜி பின்னே சென்ற சிறுமியின் பெற்றோர்கள் பாலாஜியை அவரது வீட்டில் வைத்து பூட்டி, காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம், பாலாஜியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும சிறுமியின் வாக்குமூலத்தை வைத்து விசாரித்ததில் சம்பவம் உறுதிபடுத்தப்பட்டதால், பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 10

0

0