அரசு கிடங்கில் 7000 டன் நெல் மூட்டை மாயம்…? அதிர்ந்து போன அதிகாரிகள்… நேரில் ஆய்வு செய்த தருமபுரி ஆட்சியர் கொடுத்த விளக்கம்…!!

Author: Babu Lakshmanan
31 May 2023, 1:59 pm
Quick Share

தருமபுரி அருகே வாணிபக்கழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிலிருந்து 7000 டன் நெல் மூட்டை மாயமானது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிலிருந்து 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாகவும், பல்வேறு விதமாக தகவல்கள் பரவி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி, நெல் சேமிப்பு கிடங்கினை அரசு அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சாந்தி கூறியதாவது :- சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயமாகவில்லை. சேமிப்பு கிடங்கில் மூட்டைகள் சரிந்திருக்கிறது. அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவாதகவும், 7 ஆயிரம் டன் நெல் மாயமாகி இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயாகவில்லை.இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நூறு சதவீத முறையான விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

டெல்டா மாவட்டங்களிலிருந்து 11 வேன்கள் மூலம் 22 ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டது. அதில் 7 ஆயிரத்து 174 மெட்ரிக் டன் அறவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்ப பட்டிருக்கிறது.

மீதம் 15 ஆயிரத்து 98 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. இருப்பு முழுவதும் அறவைக்கு அனுப்பிய பிறகு ஆய்வுக்குட்படுத்துபட்ட பிறகு முழுமையான விபரங்கள் தெரியவரும், என்றார்.

Views: - 179

0

0