நாளை 72வது குடியரசு தினக் கொண்டாட்டம் : கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
25 January 2021, 10:33 amகோவை : குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாட்டின் 72வது குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையை பொறுத்தவரை ரயில் நிலைநிலையம் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை ரயில் நிலையத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளையும், கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளையும் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்து வருகின்றனர்.
மேலும், பயணிகள் கொண்டுவரும் உடைமைகள் மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு ஸ்கேன் செய்யப்பட்டு, மத்திய ரிசர்வ் படையின் மோப்ப நாய் ராக்சி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
0
0