கோவை வந்தது 73 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி..!

13 January 2021, 2:34 pm
Quick Share

கோவை: சென்னையிலிருந்து 73 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று கோவை வந்தடைந்தன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வரைசை எதிர்க்க தடுப்பூசியை அனைவரும் எதிர் நோக்கிய நிலையில் நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்குகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தமிழகத்திற்கு மட்டும் 5.36 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் பூனேவில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தது. அங்கிருந்து தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள10 மையங்களுக்கு இந்த கொரோனா மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மட்டும் 73 ஆயிரத்து 200 கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் இன்று வாகனம் மூலமாக கோவை வந்தடைந்தது. இந்த மருந்துகள் அனைத்தும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதார துறை அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதில், கோவைக்கு 40 ஆயிரத்து 600 டோஸ், ஈரோடு மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 800 டோஸ், திருப்பூர் மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 500 டோஸ், நீலகிரி 5 மாவட்டத்திற்கு 300 டோஸ் என தடுப்பூசிகளை விநியோகம் செய்யவதற்கான பணிகளை சுகாதரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 4

0

0