18வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி..!!

4 February 2021, 1:24 pm
cm fund - updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சென்னையில் நடைபெறவுள்ள 18வது சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.

புரட்சித் தலைவி ஜெயலலிதா திரைப்பட உலகிற்குப் பெருமை சேர்த்திடும் வகையில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்கள். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திட 2013ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு 10 கோடி ரூபாயை மானியமாக வழங்கினார்.

2011ம் ஆண்டு நடைபெற்ற 9வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, 2018ம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார்கள்.

2019ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 17வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். அந்த வகையில், தற்போது சென்னையில் 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ள 18வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதலமைச்சர் இன்று, இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ. தங்கராஜ் அவர்களிடம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0