கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 75 வயது முதியவர் கைது: 10 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்

Author: Udhayakumar Raman
25 June 2021, 8:31 pm
Quick Share

விருதுநகர்: காரியாபட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 75 வயது முதியவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சம்பங்கி தெருவைச் சார்ந்த சாமிக்கண்ணு (75). இவர் காரியாபட்டி அருகே உள்ள அச்சம்பட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காரியாபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை செய்த காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆனந்தஜோதி, சாமிகண்ணுவிடம் நடத்திய விசாரணையில் சாமிகண்ணு அந்த பகுதியில் கஞ்சா விற்பனை ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த இருந்த சுமார் 10 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து காரியாபட்டி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். மேலும் சாமிக்கண்ணு அளித்த தகவலின்படி சிவகங்கையை சேர்ந்த செல்வகுமார் என்பவரும் காவல்நிலையம் வரவழைக்கப்பட்டு இருவரிடமும் காரியாபட்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 342

0

0