75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி விற்பனை விறுவிறு… சாட்டின் வகை துணி கொடிகளுக்கு மவுசு..!

Author: Babu Lakshmanan
4 August 2022, 12:49 pm
Quick Share

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆக்ஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சுதந்திர தின விழா நெருங்கி வரும் நிலையில், தேசியக்கொடி விற்பனை மற்றும் தயாரிப்பு கோவையில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தேசியக்கொடிகள் தபால் நிலையங்கள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் குட்ஷெட் ரோடு தலைமை தபால் நிலையங்கள் உட்பட கோவையில் உள்ள 200க்கு மேற்பட்ட தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சாட்டின் வகை துணியில் தைக்கப்பட்ட தேசியக்கொடியானது ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தேசியக்கொடியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறனர். சுதந்திர தின விழா வரை அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் இதனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 3 நாட்கள் வீடுகளில் கொடியேற்றலாம் என்பதை வரவேற்கிறோம். தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தேசியக்கொடி பளபளப்பாகவும், விலை குறைவாகவும் உள்ளது. அனைவரும் இதனை வாங்கி பயனடையவும்.” என்றனர்.

Views: - 587

0

0