75வது சுதந்திர தின விழா : குமரியில் இருந்து டெல்லி ராஜ்கோட் வரை சிஆர்பிஎப் வீரர்களின் சைக்கிள் பேரணி துவங்கியது!!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2021, 2:10 pm
கன்னியாகுமரி : இந்தியாவின் 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரையிலான சி.ஆர்.பி.எப் வீரர்களின் சைக்கிள் யாத்திரையை அமைச்சர் மனோதங்கராஜ் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக ஆசாதி கா அம்ருத் மஹாத்ஸவ் என்னும் கன்னியாகுமரியிலிருந்து டெல்லி ராஜ்காட்டில் வரை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் சைக்கிள் பேரணியானது இன்று கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து துவங்கியது.
இதற்காக கடற்கரை பகுதியில் பிரமாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கரகாட்டம், பாரம்பரிய நடனம், சுதந்திர பாடல் நடனங்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதனை அடுத்து தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஐதராபாத் மத்திய பாதுகாப்பு படையில் ஏடிஜிபி ரேஷ்மி சுக்லா, எம்பிகள் விஜய் வசந்த், எம்பி.விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், போலீஸ் கண்காணிப்பாளர்.பத்ரி நாராயணன் எம்எல்ஏக்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0
0