கரூரில் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் : ஆட்சியர் சங்கர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2021, 12:53 pm
Karur Ind Day- Updatenews360
Quick Share

கரூர் : 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சமாதானப் புறாக்கள் பறக்க விட்டு, தேசியக்கொடி வர்ணங்கள் அடக்கிய பலூன்களை பறக்கவிட்டனர். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, தோட்டக்கலை துறை சார்பாக வேளாண் இடுபொருள், தென்னங்கன்று, மின்மோட்டார் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 152 பயனாளிகளுக்கு ரூ.1,26,77,357 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Views: - 306

0

0