தமிழகம் முழுவதும் 78 ஆயிரம் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்ட இதில் கோவையை சேர்ந்த மாணவ,மாணவிகள் பத்மாசனத்தில் அமர்ந்து தேசிய கொடியை இரு கைகளில் உயர்த்தி பிடித்து உற்சாகம்.
நடைபெற்ற நிகழ்வில் பத்மாசனத்தில் அமர்ந்தபடி 78 விநாடிகள் இரு கைகளிலும் தேசிய கொடியை உயர்த்தி பிடித்து யூனியன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்.நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 240 மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 78 ஆயிரம் மாணவ,மாணவிகள் யோகாவில் புதிய உலக சாதனை செய்துள்ளனர்.
அதன் படி கோவையில் உள்ள சக்தி சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளும் இந்த உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்டனர். சுமார் ஐந்து வயது முதலான குழந்தைகள் முதல் கலந்து கொண்ட இதில்,பத்மாசனத்தில் அமர்ந்த படி இரு கைகளிலும் தேசிய கொடியை உயர்த்தி பிடித்து 78 விநாடிகள் தொடர்ந்து அமர்ந்து வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
சாதனை நிகழ்வை கண்காணிக்க யூனியன் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் அமெரிக்காவில் இருந்து நேரடியாக வந்து சாதனை நிகழ்வை பார்வையிட்டார். பத்மாசனத்தில் அமர்ந்த மாணவ,மாணவிகள் தேசிய கொடியை பிடித்து உற்சாகமாக அசைத்தபடி யோகா செய்த இந்த சாதனை வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளியின் தாளாளர் தீபன் தங்கவேலு மற்றும் யோவா யோகா அகாடமியின் இயக்குனர் வைஷ்ணவி ஆகியோரிடம் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார. தமிழக அளவில் உலக சாதனை நிகழ்வாக நடைபெற்ற இதில், கோவை மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டதை பள்ளியில் பயலும் சக மாணவர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.