மின்சாரம் தாக்கி 8 மாடுகள் உயிரிழப்பு.. கதறி அழுத உரிமையாளர்

Author: kavin kumar
7 January 2022, 1:49 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த மின் கம்பியில் சிக்கி 8 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் லம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்தவர் சம்பத், இவர் 10 க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றார், இந்நிலையில் நேற்று மாலை மேய்ச்சலுக்காக எட்டு கறவை மாடுகள் சென்றுவிட்டு மீண்டும் இரவு புதுச்சேரி வுழுப்புரம் புதிய புறவழி சாலை வழியாக வந்த போது அங்கிருந்த முட்புதரில் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வான நிலையில் அறுந்து கிடந்ததை அடுத்து, 8 மாடுகளும் மின்னழுத்த உயர் கம்பியில் உரசியதை யொட்டி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து சம்பத் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாடுகள் இறப்பு குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாடுகளை இழந்த அதன் உரிமையாளர்கள் கதறி அழுதனர்.

Views: - 274

0

0