8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

17 November 2020, 4:11 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழையும், சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், குமரி கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பய்யும் எனக் கூறிய வானிலை ஆய்வு மையம், சென்னை நகர், புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு லேசான மழையே பெய்யும் என தெரிவித்துள்ளது. குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் அந்தப் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0