8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : உங்க ஊரு இருக்கானு தெரிஞ்சுக்கோங்க..!!!

19 November 2020, 1:15 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மாலத்தீவு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. லட்சத்தீவு, கேரள கரையோரம் பலத்த சூறாளவி வீசக்கூடும் என்பதால், 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 31

0

0

1 thought on “8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : உங்க ஊரு இருக்கானு தெரிஞ்சுக்கோங்க..!!!

Comments are closed.