8 மாத ஆண் குழந்தைக்கு மாரடைப்பு… விசாரணையில் அதிர்ச்சி : திருவள்ளூரில் சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2024, 4:49 pm
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே அரங்கம் குப்பம் கிராமத்தில் வசிப்பவர் மீனவரான அஜித்குமார் இவரது எட்டு மாத ஆண் குழந்தை சர்வேஷ்.
சிறிய பிளாஸ்டிக் பந்தை வாயில் வைத்து விளையாடிய போது தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வந்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தொண்டையில் சிக்கிய பந்தை எடுப்பதற்கு முயற்சி செய்து பந்தை வெளியே எடுத்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதற்க பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு குழந்தை மருத்துவமனையிலேயே இறந்துள்ளது.
இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Views: - 240
0
0