8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

9 May 2021, 11:15 am
Madurai Preg Doctor Dead - Updatenews360
Quick Share

மதுரை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை அனுப்பானடி சுகாதார நிலையத்தில மருத்துவ அலுவராக பணியாற்றியவர் சண்முகப்பிரியா. 8 மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்க மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் நுரையீரலில் 90 சதவீதம் தொற்று ஏற்பட்டதால் சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கர்ப்பிணி என்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தாயும் அவர் வயிற்றில் இருந்த சிசுவும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்களப் பணி வீரராக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த இளம் மருத்துவரை இழந்திருப்பது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதே போல பலர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 154

0

0