கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் கூலித்தொழிலாளி!!

2 February 2021, 2:41 pm
POCSO Arrest - Updatenews360
Quick Share

கோவை : சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த கூலி தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கோவை, தெற்கு உக்கடம் அல்அமீன் காலனியைச் சோ்ந்தவா் ரிஸ்வான் (வயது 32). கூலி தொழிலாளியான இவர், லாரிப்பேட்டை பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வெளியே சொல்லக் கூடாது எனவும் அச்சிறுமியை அவா் மிரட்டியுள்ளாா். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளாா். சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மேற்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரிஸ்வானை நேற்று கைது செய்தனா்.

Views: - 0

0

0