82 வயது மூதாட்டியை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை :

2 September 2020, 10:41 am
Grandma - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : வெண்டலிகோடு பகுதியில் சொத்துக்காக வீட்டில் அடைத்து வைத்து வைக்கப்பட்ட 82 வயது மூதாட்டியை உறவினர்கள் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் கமலபாய் (வயது 82). மூதாட்டியான இவரும் இவரது மகள் விமலா சாந்தவும் (வயது 67) வசித்து ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் அவரது மகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நோய் வாய்ப்பாட்டு உயிரிழந்தார் .

இந்த நிலையில் வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வரும் நிலையில் சொத்துக்காக மூதாட்டியை வீட்டில் அடைத்து வைத்து சொத்தை அபகரிக்க பத்து காணி பகுதியை சேர்ந்த யூகேந்திரன் என்பவர் முயற்சி செய்வதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்து பூட்டி வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன் திரண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ மனோதங்கராஜ் வீட்டை திறக்க முயன்றார். தொடர்ந்து கதவு மூடப்பட்டிருந்தால் குலசேகரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்து போலிசார் வந்து சம்பந்தப்பட்ட யூகேந்திரனை அழைத்து வந்து அறையை திறந்து முதட்டியை மீட்டனர்.

தொடர்ந்து சொத்தை அபகரிக்க முயற்சி செய்த யூகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ.வும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0