திண்டுக்கல், மதுரை உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!!

2 November 2020, 2:18 pm
rain tn - updatenews360
Quick Share

சென்னை : திண்டுக்கல், மதுரை, கோவை உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் லேசான மழையும் எட்டிப் பார்த்து வருகிறது. இதனால், குளங்கள், ஏரிகள் உள்ளிட்டவை வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில், அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரம் மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக இந்த மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மற்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 20

0

0