தெருவுக்கு தெரு சர்வ சாதாரணமாக நடந்த கஞ்சா விற்பனை : வடமாநில கும்பல் அதிரடி கைது : 9 கிலோ கஞ்சா, போதை சாக்லெட்டுகள் பறிமுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2022, 8:13 pm
Cannbis Sales Arrest -Updatenews360
Quick Share

திருப்பூர் : பெருமாநல்லூரில், அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா என்ற போதை பொருளை விற்ற வட மாநில வாலிபர்கள் 5 பேரை பெருமாநல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் அருகே, பெருமாநல்லூர் நால்ரோடு மற்றும் ஈட்டிவீரம்பாளையம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. பெருமாநல்லூர் போலீசார் குழுவினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது பெருமாநல்லூரில் நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். இதில், இவர்கள் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த மதன்மோகன்சாகு (வயது 26), விஸ்வநாதன்சாகு (வயது 23) என்பதும் திருப்பூர் கருவம்பாளையத்தில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது.

மேலும் பெருமாநல்லூரில் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். இவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டுக்குமார்(வயது 22), ராஜாகுமார்(வயது 23),மற்றும் தர்மேந்திரகுமார் (வயது 22) என்பதும், இவர்கள் முட்டியங்கினறு பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது.

குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா, 1 கிலோ போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 1165

0

0