90ஸ் கிட்ஸ் பேவரட் : மழலையின் மகிழ்ச்சிக்காக லாபத்தை எதிர்பார்க்காத ஜவ்வுமிட்டாய் தாத்தா!!!

14 July 2021, 5:07 pm
Quick Share

நாடு முழுவதுமே சாக்லெட் விற்பனைக்கு வந்த பிறகு, கடலை மிட்டாய், தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், குச்சி மிட்டாய், ஜவ்வு மிட்டாய், கமர்கட் என பல வகையான இனிப்புகள் காணாமல் போய் விட்டன. 80,90 வருடங்களில் வயதில் பிறந்தவர்களின் நீங்கா இடம் பெற்றது பம்பாய் மிட்டாய் என்று சொல்லப்படும் ஜவ்வு மிட்டாய். இதை கிராமங்களில் பொம்மை மிட்டாய் என்பார்கள்.ஒரு நீண்ட மூங்கில் தடியில், ஒரு அழகான பொம்மையை பொருத்தி, அதன் கீழ் பகுதியில் இந்த மிட்டாயை மொத்தமாக சுற்றி வைத்து, தோளில் சாய்த்து சுமந்தபடி வீதியில் நடந்து விற்பனை செய்வார்கள்.

வெள்ளையும், ரோஸ் நிறமும் கலந்த இந்த மிட்டாயை பார்க்கும் போதே, குழந்தைகள் வாயில் எச்சில் ஊறும்.மிட்டாய்காரர்கள் அந்த மிட்டாயில் பொம்மைகள் செய்யும் அழகே தனி. மயில், புறா, கிளி, என, பறவைகள் உருவங்களையும், கடிகாரம், மோதிரம், நெக்லஸ் போன்ற ஆபரணங்களையும் கலை நயத்துடன் செய்து, குழந்தைகளுக்கு அணிவித்து விடுவார்கள்.எங்கு திருவிழா நடந்தாலும் பொம்மை மிட்டாய்காரர்களை பார்க்க முடியும். இவர்களை சுற்றி குழந்தைகள் கூட்டம் நிற்கும்.ஆனால் இன்றைக்கு இந்த மிட்டாய்காரர்கள் பார்க்க முடிவதில்லை.

இந்தக் குறையை திண்டுக்கல் மக்களுக்கு இல்லாமல் பார்த்து கொள்கிறார். தேனியை சேர்ந்த ஜவ்வு மிட்டாய் விற்பனையாளர் மணிகண்டன் என்பவர், தேனியிலிருந்து தினந்தோறும் திண்டுக்கல் வரும் மணிகண்டன் திண்டுக்கல் முக்கிய பகுதிகளில் சென்று  விற்பனையில் ஈடுபடும் போதும் அவருக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வியாபாரம் நடப்பதாகும் இதில் பஸ் பயணம் மற்றும் சாப்பாடு போக குறைந்த அளவே பணம் கிடைப்பதாகவும் ஆனால் சிறுவர்கள் வாங்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை பெரிதாக உள்ளதாக அவர் கூறுகிறார்.

இந்த நிலையில்தான் இன்று அவர் திண்டுக்கல்லில் விற்கும்போது பலர் அவரிடம் சென்று ஆர்வத்துடன் ஜவ்வு மிட்டாய் வாங்கி தேவையான வடிவில் செய்து தருமாறு கேட்டு வாங்கிச் சென்றனர். எந்த நிலையில் இருந்தாலும் 80,90 ஃபேவரிட் அது ஜவ்வு மிட்டாய் யார்தான் இருக்க முடியும் என தெரிந்தது.

Views: - 126

0

0