15 வயது சிறுமி பாலியல் வன்புணர்ச்சி .. 17 வயது சிறுவன் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்ப்பு

Author: Udhayakumar Raman
1 July 2021, 6:59 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கூறப்படுகிறது. திடீரென அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனை சென்று பரிசோதித்த போது, அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த 17 வயது சிறுவன் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுவனை மகளிர் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து மதுரையில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டு சென்றனர்.

Views: - 221

0

0