ஆண் நண்பருடன் வந்த 17 வயது சிறுமி எஸ்ஐ உட்பட காவலர்கள் செய்த அட்டூழியம்… தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
திருச்சி முக்கொம்பு பகுதிக்கு ஆண் நண்பருடன் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பயிற்சி எஸ்ஐ உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட பயிற்சி எஸ்ஐ உட்பட 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவிட்டுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 பேரையும் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி இருக்கக்கூடிய முக்கிய சுற்றுலா தளங்களில் முக்கொம்பு ஒன்றாகும். இங்கு திருச்சியில் இருப்பவர்கள் மட்டுமில்லாமல் சுற்று பகுதியில் இருப்பவர்களும் வருகை தருவார்கள். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 சிறுமி தன்னுடைய நண்பர் ஒருவருடன் முக்கொம்பு வந்துள்ளார்.
அந்த நேரத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றக்கூடிய சசிகுமார் மற்றும் தனது சக காவலர்கள் நண்பர்களான பிரசாத், சித்தார்த், சங்கரபாண்டி ஆகியோர்கள் வந்துள்ளனர்.
அந்த சமயத்தில் அங்கு வந்த 17 வயது சிறுமியை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 17 வயது சிறுமி முக்கொம்பூர் அருகே உள்ள ஜீயபுரம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்திருந்தார்.
காவலர்கள் மீதே புகார் அளிக்கப்பட்ட விவகாரம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரிடம் சென்றது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணையில் சிறுமியை தொந்தரவு செய்தது உண்மை என தெரியவந்ததை அடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போக்ஸோ வழக்கு பதிவு செய்து, கைது செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், பயிற்சி எஸ்ஐ உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.