விவசாய குட்டையில் சிக்கிய 4 வயது யானை… கடவுள் போல வந்த வனத்துறை : நன்றி கூறிய கொம்பன்.. (வீடியோ)!!
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடிமடை பிரிவு மங்கள பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள விவசாய குட்டையில் சுமார் நான்கு வயது உடைய ஆண் யானை சிக்கியுள்ளது.
இதனை ரோந்து பணியின் போது அறிந்த வனத்துறை ஆல்ஃபா குழுவினர் உடனடியாக வனசரக அலுவலருக்கு தகவல் அளித்து பின்னர் அங்கு வந்த வன அலுவலர் தலைமையிலான குழுவினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் தண்ணீர் நிரம்பியிருந்த குட்டையை மட்டம் செய்து யானையை குட்டையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
பின்னர் யானையை ஆசுவாசப்படுத்தி பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்பினர். யானை விழுந்த குட்டை வனப்பகுதியில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வனப்பகுதியை ஒட்டியே குட்டைகள் தோண்டப்படுவதால் வனவிலங்குகள் அடிக்கடி இது போன்ற இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவும் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.