சிறுமியை சீரழித்த 42வயது நபர்… நடுக்காட்டில் அரங்கேறிய கொடூரம் : நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2023, 9:37 am
Pocso - Updatenews360
Quick Share

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ்(42) என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததன் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தங்கராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை செய்த புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர் படுத்திய நீதிமன்ற காவலர் பரசுராமன் ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.

Views: - 157

0

0