டியூசனுக்கு போன 5 வயது சிறுமி… மருத்துவமனையில் அனுமதி… மாயமான டீச்சரை தேடும் காவல்துறை!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2024, 5:15 pm

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். கூலி தொழிலாளியான இவரது 5-வயது மகள் சாதனா.

அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார் மாலை வீட்டிற்கு வரும் சிறுமி பக்கத்து வீட்டை சேர்ந்த நிஷா என்பவரிடம் டியூசனுக்கு செல்வது வாடிக்கை.

வழக்கம் போல் புதன்கிழமை மாலை டியூசனுக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி சாதனா தனது உடம்பு வலிப்பதாக பாட்டி துளசியிடம் கூறியுள்ளார்.

அவரும் சிறுமியின் முதுகை பார்த்த போது இரத்த காயங்கள் இருந்துள்ளது இதனையடுத்து பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு சிறுமி கீழே ஏதேனும் விழுந்தாரா என விசாரித்துள்ளார்.

ஆனால் அதுபோல் எந்த சம்பவமுமம் நடைபெறவில்லை என ஆசிரியர் தரப்பில் கூறப்பட்ட நிலையில் சிறுமியிடம் தொடந்து விசாரிக்கையில் டியூசன் டீச்சர் நிஷாவும் அவரது தாயாரும் தன்னை கம்பால் தாக்கியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்காக சேர்ந்த தந்தை சதீஷ் சம்பவம் குறித்து தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார்

புகாரின் பேரில் நிஷா மற்றும் அவரது தாயார் மீது சிறார் நீதிச்சட்டம் உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் தலைமறைவாக இருக்கும் டியூசன் டீச்சர் நிஷாவையும் அவரது தாயாரையும் தேடி வருகின்றனர்

  • Superstar Rajinikanth's Upcoming Medical Trip to America ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!
  • Views: - 597

    0

    0