மதுபாட்டிலுடன் கோயிலை சுற்றி வரும் குடிமகன்… அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2023, 9:42 pm
Liquor Man - Updatenews360
Quick Share

கரூரில் பசுபதீஸ்வரர் ஆலயத்தினை சுற்றி வலம் வரும் குடிமகன்கள் அட்ராசிட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் என்றால் தமிழக அளவில் மட்டுமில்லாமல், தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் நிலையில், இந்த ஆலயத்தின் சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதிகளில் நாளுக்கு நாள் குடி போதையில் போதை ஆசாமிகள் நடத்தி வரும் நிலை தொடர்கின்றது.

அருகில் தான் கரூர் நகர காவல்நிலையம் மற்றும் பேருந்து நிலையம் என்றாலும் சுற்றுப்பகுதிகளில் வலம் சென்று வரும் பக்தர்களுக்கு முழு அளவில் இடையூறு ஏற்படுத்துவதோடு, பட்டப்பகலில் பாட்டீல்களை எடுத்து சென்று அதுவும் பொதுமக்கள் மத்தியில் ஒரு ரெளடி கெட்டப்பில் புல் எனப்படும் மதுபான பாட்டிலில் முக்கால் வாசி குடித்து விட்டு மீதமுள்ள ¼ வாசி சரக்கினை மட்டும் அப்படியே பாட்டிலில் அதுவும் கோயிலின் வெளிப்புற வளாகத்தில் சுற்றுப்பாதையில் தடுமாறியவாறு சென்று அங்கே உள்ள மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்லாப்களில் அமர்ந்து தண்ணீர் அருந்துகின்றனர்.

இந்த காட்சி ஒருபுறம் ஆங்காங்கே வைரலாகி வரும் நிலையில் குடி குடியை கெடுக்கும் என்று பாட்டிலில் எழுதி வைத்து வியாபாரம் செய்து அரசிற்கு அதிக அளவிற்கு வருமானத்தினை கொடுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொகுதியிலேயே அதுவும் அவரது சொந்த ஊரான கரூரிலேயே இப்படி குடிமகன்கள் செய்து வருவது தான் வியப்பின் குறியீடாக உள்ளது.

இதுமட்டுமில்லாமல், காவல்நிலையம் அருகே இருந்தும் ரவுண்ட்ஸ் வரும் போலீஸார் யாரும் இந்த குடிமகன்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தான் பக்தர்களின் கேள்வியாக எழுந்துள்ளது

Views: - 326

0

0