சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் ரகு என்கிற ரகுநாதன் (வயது 22). பிரபல ரவுடியான இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சசி (5), கிருத்திகா (2) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
ரகுநாதனும் அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் வேலை செய்யும் வெள்ளையன் என்கிற மாரிகவுண்டனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒரே குழுவாக இருந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் ரகுநாதன் தொட்டில்பட்டியில் உள்ள வேறு ஒரு குழுவில் சேர்ந்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக வெள்ளையனுக்கும் ரகுநாதனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று வெள்ளையன் தனது கூட்டாளிகளுடன் ரகுநாதனின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ரகுநாதனிடம் வேறு குழுவில் சேர்ந்து கொண்டு எனக்கு எதிராக செயல்படுகிறாயா என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில் ரகுநாதனை வெள்ளையன் தரப்பினர் தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கும்பலை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
இதனிடையே ரகுநாதன், வெள்ளையன் கும்பல் மீது போலீசில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றதாக தெரிகிறது.
இதனை அறிந்த வெள்ளையன், மேட்டூர் அனல் மின்நிலைய நான்கு ரோட்டை சேர்நத் மூர்த்தி (36), நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (30) மற்றும் சிலருடன் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக அமர்ந்திருந்த ரகுநாதனை வெள்ளையன் மற்றும் அவரின் கூட்டாளிகள் கத்தியால் குத்தி, கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளனர்.
இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ரகுநாதன் உயிரிழந்தார். இதனை பார்த்து செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கில் பிடிபட்டுள்ள வெள்ளையன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் வெல்டிங் வேலை செய்து வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளைன் மற்றும் மூர்த்தி ஆகிய இருவருக்கும் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பிரகாஷ் மற்றும் நிவாஷ் ஆகிய இருவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.