திருமணமாகாமல் கர்ப்பமான கல்லூரி மாணவி: பிறந்த குழந்தையை மருத்துவமனையில் விட்டு சென்ற அவலம்…!

Author: kavin kumar
29 December 2021, 2:03 pm
Quick Share

திருவாரூர்: பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டு விட்டு திருமணமாகாத கல்லூரி மாணவி தப்பி ஓடிய சம்பவம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் காட்டூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் வினிஷா. இவர் திருவாரூர் அருகே கடாரங்கொண்டான் பகுதியில் உள்ள திருவிக அரசு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வினிஷா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கடந்த 13ஆம் தேதி வினிஷாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணமாகாத நிலையில் வினிஷாவிற்கு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று குழந்தையை விட்டுவிட்டு வினிஷா மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். மருத்துவமனையில் வினிஷா அளித்த முகவரி தகவல்கள் மற்றும் அலைபேசி எண்ணை கொண்டு திருவாரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை மீட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

Views: - 290

0

0