சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு ரிஷபனூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியாகவும், தேசிய லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது சொந்த வீட்டில் தங்கி இருந்த நிலையில், இன்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கேட்டில் மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடி குண்டை வீசியுள்ளனர்.
ஆனால் அது வெடிக்காத நிலையில் வீட்டின் முன் பக்கம் கிடந்துள்ளது. வீட்டின் சன்னல் கண்ணாடிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டின் சுவற்றில் கருப்பு மையையும் மர்மநபர்கள் ஊற்றி சென்றுள்ளனர்.
வீட்டின் முன்புற கேட்டில் ஆங்காங்கே வி.சி.க., கட்சி கொடியையும் ஊன்றிவிட்டு சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி இது குறித்து சாலை கிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸ் டி.எஸ்.பி.,சிபி சாய் சௌந்தர்யன்,சாலை கிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.