உங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷலா? அமைச்சரின் பரிந்துரை கடிதமுடன் சமயபுரம் கோவிலுக்கு வந்த பக்தர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 8:02 pm
Recommend Letter - Updatenews360
Quick Share

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனத்திற்காக சட்டத்துறை அமைச்சர் நேர்முக உதவியாளர் வழங்கிய பரிந்துரை கடித்தால் குளறுபடி ஏற்பட்டதால் அதிகாரிகளிடம் பக்தர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து தினமும் லட்ச கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனை சிறப்பு தரிசனம் செய்வதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரை கடிதம் ஒன்றை பெற்று வந்துள்ளார்.

இவ்வாறு பரிந்துரை கடிதம் பெற்று சமயபுரம் கோயிலுக்கு வந்திருந்த அவர் கோவில் டிக்கெட் கவுண்டரில் பணியில் இருந்த அறநிலையத்துறை அதிகாரியிடம் பரிந்துரை கடிதத்தை காண்பித்துள்ளார்.

அதனை அதிகாரி பார்த்தபோது கடிதத்தில் அரசு முத்திரையுடன் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரின் இளநிலை நேர்முக உதவியாளர் விஜயராகவன் என்று தனித்துவ பரிந்துரை கடிதமாக இருந்தது.

இந்த பரிந்துரை கடிதத்தை ஏற்றுகொள்ள இயலாது ஆகையால் தரிசன கட்டணத்தை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணதாசன் அதிகாரிகளிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சரின் இளநிலை நேர்முக உதவியாளர் என்ற பெயரில் கோவிலில் கொடுக்கப்பட்ட பரிந்துரை கடிதத்தால் குளறுபடி ஏற்பட்டு நடந்த வாக்குவாத சம்பவத்தினால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து வேறு வழியில்லாமல் கண்ணதாசன் தனது குடும்பத்துடன் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்.

இதுபோன்று அமைச்சர்களின் நேர்முக உதவியாளர்கள் அரசு முத்திரையை பயன்படுத்தி தனித்துவமாக பரிந்துரை கடிதத்தை வழங்கலாமா அவ்வாறு வழங்கப்படும் கடிதங்கள் செல்லுபடி ஆகுமா என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Views: - 475

0

0