வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த குடும்பம்.. மலை போல குவிந்து கிடந்த கஞ்சா : கைதான தாய்… தப்பியோடிய மகன்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 11:06 am
Cannabis Supply - Updatenews360
Quick Share

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பகுதியில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தும், தாயை கைது செய்தும் தப்பி ஓடிய மகனை கல்லக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

புள்ளம்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ளது தைலாகுளம் . இந்த தைலாக்குளம் தெருவினைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி சேவாகி வயது 52 . இவர் மற்றும் இவரது மகன் கார்த்தி ஆகியோர் அப்பகுதியில் கஞ்சா விற்பதாக கல்லக்குடி போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டினை பரிசோதனை செய்த போது வீட்டில் 1.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சேவாகியை கைது செய்தும் இவரது மகன் கார்த்தி என்பவர் தப்பி ஓடி விட்டார் . தப்பி ஓடிய அவரை கல்லக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 176

0

0