படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மீனவர்கள் படுகாயம் : ஒருவர் மாயம்!!

30 October 2020, 6:42 pm
boat Accident - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தேங்காய்ப்பட்டணம் துறைமுகப்பகுதியிலிருந்து வள்ளத்தில் மீன்பிடிக்கசென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் மாயமானார்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் அருகே வள்ளவிளையை சார்ந்த ஏசுதாசன் (வயது 53), வர்க்கீஸ், மிக்கேல் பிள்ளை, கிளாரன்ஸ், வின்சென்ட் ஆகியோர் வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றபோது துறைமுக முகத்துவாரத்தில் வள்ளம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மீனவர் ஏசுதாசன் மாயமானதையடுத்து மாயமானார். உடனிருந்த மீனவர்கள் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மாயமான மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டுமென சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி தமிழக முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள்
வைத்துள்ளார்.