‘2000 ரூபாயா அது எப்படி இருக்கும்‘ : பெட்ரோல் பங்க் மேலாளரை ஏமாற்றி ரூ.83 ஆயிரம் கொள்ளையடித்த வெளிநாட்டவருக்கு வலை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2021, 5:41 pm
Petrol Bunk Robbery - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : மதுராந்தகம் அருகே பெட்ரோல் பங்க் மேலாளரிடம் நூதன முறையில் கைவரிசை காட்டிய வெளி நாட்டை சேர்ந்தவர் ரூ.83 ஆயிரம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பவுஞ்சூர் கிராமத்தில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் இன்று வெளிநாட்டினர் 3 பேர் நிறுவன ஊழியரிடம் பெட்ரோல் போடுவதாக கூறி 2000 ரூபாயை நாங்கள் பார்த்ததில்லை எங்களிடம் வெளிநாட்டு நோட்டுகள் தான் உள்ளது என்றும், இரண்டு ஆயிரம் ரூபாயை காட்டுமாறு ஊழியரிடம் கூறினர்.

அவர் 2000 ரூபாய் பணம் என்னிடம் இல்லை என கூறி மேலாளரிடம் உள்ளதாக கூறி மேலாளர் ஜெயகிருஷ்ணன் இடம் ஊழியர் அழைத்துச் சென்றார். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த வெளிமாநிலத்தவர் அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவர் வைத்திருந்த ரூபாய் 83 ஆயிரம் பணத்தை அவருக்கு தெரியாமல் நூதன முறையில் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பித்து சென்றனர்.

ச்சம்பவம் குறித்து ஜெயகிருஷ்ணன் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
இந்த புகாரின் பேரில் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு இந்த சிசிடிவி பதிவை வைத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 234

0

0