கோவையில் மேலும் 498 பேருக்கு கொரோனா பாதிப்பு…

30 August 2020, 10:05 pm
Quick Share

கோவை: கோவையில் பயிற்சி மருத்துவர்கள் இருவர் உள்பட 498 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்த 27 வயது பெண், 26 வயது ஆண் ஆகிய இரு பயிற்சி மருத்துவர்கள், 18, 19 வயது செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், 36 வயது தலைமை செவிலியர், பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 44, 34 வயது பெண்கள், 27, 45 வயது ஆண்கள், போத்தனூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த 51 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர உப்பிலிப்பாளையத்தில் 34 பேர், செல்வபுரத்தில் 20 பேர் ராமநாதபுரத்தில் 11 பேர் பீளமேடு, காந்திபுரம், கணபதியில் தலா 7 பேர் உள்பட 498 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களின் 5 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 0

0

0