அதிவேகமாக சென்ற பைக்… வளைவில் திரும்பும் போது 50 அடி உயரத்தில் பறந்து மரத்தின் மீது மோதி விபத்து : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2022, 6:10 pm
Bike Accident - Updatenews360
Quick Share

பொள்ளாச்சி சேர்ந்த சந்தோஷ் மற்றும் குணா இருவரும் நண்பர்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால் கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் அணையை சுற்றிப்பார்க்க சென்று விற்று நேற்று மதியம் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கலக்குறிச்சி தனியார் கல்லூரி அருகே அதிவேகமாக முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்லும் பொழுது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நடந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில் அதிவேகமாக சுமார் 50 அடிக்கு மேல் காற்றில் பறந்தபடி மரத்தில் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ காட்சி பதிவாகியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக வருகிறது.

Views: - 200

0

0