புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டில் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முழுக்க நம்முடைய தமிழர்களுடைய பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும், வீரத்தையும், பறைசாற்றக் கூடிய வகையில் ஆறு மாதங்களுக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு இரண்டு ஜல்லிக்கட்டு மூன்று ஜல்லிக்கட்டுக்கு மேல் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு அதிகமாக நடக்கக்கூடிய மாவட்டம், ஜல்லிக்கட்டு கலை கட்டக் கூடிய மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும்.
ஜல்லிக்கட்டு என்பது ஒரு பாரம்பரிய திருவிழா, ஜல்லிக்கட்டில் ஆன்லைன் டோக்கன் என்பது விழா குழுவினரை வேதனை செய்யக்கூடிய விஷயமாக உள்ளது.
கிராம கமிட்டி எந்த காளைகளை அனுமதிக்கிறார்களோ எந்த ஊரின் காளையை விரும்புகிறார்களோ அந்த விருந்தோம்பல் முறை இந்த முறையில் முழுவதுமாக தவிர்க்கப்படுகிறது.
விருந்தோம்பலை ரத்து செய்யக்கூடிய எந்த முறையும் தேவையில்லை. விரைவில் ஆன்லைன் முறையை ரத்து செய்துவிட்டால் நானே முன்நின்று என்னுடைய தலைமையில் ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகளுடன் போராட்டம் நடத்தப்படும்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை சூழ்ந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க கூடிய சூழல் ஏற்படும். உடனடியாக மாவட்ட நிர்வாகம்,அரசு கால்நடைத்துறை ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்.
விழா குழுவினருக்கு தான் டோக்கன் வழங்கும் உரிமல உள்ளது.விரைவில் ஆன்லைன் டோக்கனுக்கு எதிரான போராட்டம் விரைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்படும். இவ்வாறு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.