வயலில் நடந்து சென்ற போது மின்சார கம்பி அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி : மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2022, 3:34 pm
EB Dead - Updatenews360
Quick Share

பொன்னேரி அருகே விவசாயக் கூலி தொழிலாளி உயர் மின் அழுத்த மின்கம்பி அருந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் விவசாய விளைநிலத்தில் பணிக்காக சென்ற கூலி தொழிலாளிகதிர்வேல் (வயது 55) வயலில் நடந்து சென்ற போது உயர் மின் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்து வந்த பொன்னேரி போலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக மி்ன் கம்பி அறுந்து விழுந்து விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

Views: - 151

0

0