கணவர் இறந்த துக்கம்: 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…!!

2 November 2020, 12:37 pm
lady death - updatenews360
Quick Share

நாகர்கோவில் அருகே கணவன் இறந்த துக்கத்தில் இருந்த மனைவி தனது 2 மகள்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி ராசி. இவர்களுக்கு அக்ஷயா என்ற 5 வயது மகளும், அனியா என்ற 3 வயது மகளும் உள்ளனர். ரஞ்சித்குமார் தனது தந்தை ராமதாஸ் மற்றும் தாய் சந்திரா வீட்டில் கூட்டுக்குடும்பமாய் வசித்து வந்தார்.

மெடிக்கல் ஷாப் நடத்தி வந்த ரஞ்சித்குமார், கடந்தாண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். பின்னர் ராசி தனது மாமனார் மாமியாருடன் தொடர்ந்து வசித்து வந்தார். கணவர் இறந்ததால் வருமானம் இன்றி மாமனார் கூலிவேலை செய்து கிடைக்கும் வருமானத்தில், மிகுந்த கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கணவர் இறந்த சோகத்தில், ராசி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது இரு மகள்களுக்கும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை கொடுத்து கொலை செய்த ராசி, தானும் தூக்கமாத்திரையை சாப்பிட்டதுடன் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடலையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கணவர் இறந்த துக்கத்தாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 64

0

0