காவல்நிலையத்தில் நிர்வாணப்படுத்தி தாக்குதல் : போலீசார் மீது சட்ட கல்லூரி மாணவர் புகார்

Author: kavin kumar
16 January 2022, 9:16 pm
Quick Share

சென்னை: காவல்நிலையத்தில் நிர்வாணப்படுத்தி விடிய விடிய தூங்க விடாமல் போலீசார் தன்னை சித்திரவதை செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22). இவர் தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ம் ஆண்டு படித்து வருகிறது. கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார். நேற்று இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டுமாறு ரஹீஇமிடம் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு ரஹீம் தான் முகக்கவசம் அணிந்து வந்ததால் அபராதம் கட்ட முடியாது என்று கூறியுள்ளார்.

இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவலரை தாக்க முயன்றதாக கூறி ரஹீமை காவல்நிலையத்திற்கு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். காவல்நிலையத்தில் போலீசார் ரஹீமை அடித்து தாக்கியதுடன் அவரது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதாகவும் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் ரஹீம் அளித்துள்ள புகார் மனுவில், நான் சம்பவத்தன்று முகக்கவசம் அணிந்து வந்தேன்.

ஆனால் ஒழுங்காக அணியவில்லை என்று போலீசார் அபராத தொகை செலுத்த கூறினார்கள். அதற்கு நான் முடியாது என கூறியதால் அசிங்கமாக திட்டி வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர்.என்னை நிர்வாணமாக்கி இரவு முழுவதும் காவல் நிலையத்தில் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து போலீசார் காயப்படுத்தினர். பீரோவில் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட விடாமல் தாக்கினர். எனவே எனக்கு காயம் ஏற்படுத்திய காவல் துறை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Views: - 275

1

1