அதுக்காக இப்படியா? காதை அறுத்த போதை ஆசாமி!

Author: Hariharasudhan
23 October 2024, 1:52 pm

கோவை மாதம்பட்டியில் போதையில் தகராறு செய்த நபரின் காதை அறுத்தவரை பேரூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர்: கோவை பேருர் அருகே உள்ள மாதம்பட்டி பகுதியில் டாஸ்மார்க் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ராமச்சந்திரன் என்பவர், நேற்று (அக்.22) பிற்பகல் 3 மணியில் இருந்து மது குடித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அதே டாஸ்மார்க் பாரில் ஜெயராஜன் என்பவர் மது போதையில் கீழே விழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், அந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமச்சந்திரன் மற்றும் டாஸ்மாக் பாரில் இருந்த சிலர் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், ஜெயராமனை அடித்தது ராமச்சந்திரன் என்று நினைத்துக் கொண்டு, அங்கு இருந்த நபர்கள் மற்றும் பிரபாகரன் என்பவர் சேர்ந்து ராமச்சந்திரனை அடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பிரபாகரன் பாரில் குடித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, ராமச்சந்திரன் அவர் வீட்டுக்குச் சென்று, காய் வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு வந்து பிரபாகரனின் காதை அறுத்து உள்ளார்.

இதையும் படிங்க: திடீரென முட்டித் தூக்கிய மாடு.. தூக்கி வீசப்பட்ட மாணவி.. நெல்லையில் அதிர்ச்சி!

இதனால் காயம் அடைந்து துடிதுடித்த பிரபாகரன், ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்து வந்த பேரூர் காவல் துறையினர், பிரபாகரனை கத்தியால் காதை அறுத்த ராமச்சந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!