‘என் மீதே புகார் கொடுப்பியா’..? போலீஸில் புகார் கொடுத்தவரை சாலையில் ஓடஓட விரட்டி அடித்த பெண்கள்…!!

Author: Babu Lakshmanan
18 March 2023, 2:10 pm
Quick Share

கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நபரை சாலையில் துரத்தி துரத்தி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கலைச் சிற்ப வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஏமப்பேரில் உள்ள முருகன் கோவிலின் தேரோட்டத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுப்பிரமணியன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்தசூழலில் முனுசாமி என்பவர் சுப்பிரமணியனை தேரோட்டம் நடத்த விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முனுசாமி என்கின்ற ஆந்திரா மீது புகார் அளித்துள்ளார்.

எப்படி என் மீது புகார் அளிக்கலாம் என கூறி முனுசாமி என்கின்ற ஆந்திரா சுப்பிரமணியனை ஆட்களை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், நேற்றிரவு தனியாக சிக்கிய சுப்ரமணியனை தர்ம‌ அடி‌‌ கொடுத்துள்ளனர். பலத்த காயங்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுப்பிரமணியன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், சுப்பிரமணியனை அடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றது.

Views: - 35

0

0

Leave a Reply