இரும்பு கம்பியால் அடித்து மீன்வியாபாரி கொடூரக் கொலை ; மதுபோதையில் சிறுவன் உள்பட 3 பேர் வெறிச்செயல்..

Author: Babu Lakshmanan
10 November 2022, 8:45 am
Quick Share

தூத்துக்குடியில் மீன் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த இளம்சிறார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, கீதாஜீவன் நகர், வாடி தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் சார்லஸ் (44). மீன் வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு குடும்பத் தகராறில் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் தூத்துக்குடி சிதம்பர நகர பஸ் ஸ்டாப் அருகில் உள்ள இசக்கி அம்மன் கோவில் பிளாட்பாரத்தில் இரவு படுத்து தூங்குவாராம்.

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அங்கு வந்த 3 பேர் அவரிடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயமடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 3 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கெங்கநாத பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் சின்னமுத்து (39), எட்டையாபுரம் அருகே உள்ள துரைசாமிபுரத்தை சேர்ந்த அட்சையா மகன் குருசாமி (38) மற்றும் ஒரு இறம்சிறார் ஆகிய 3 பேரும் சேர்ந்து குடிபோதையில் சார்லஸை இரும்பு கம்பியால் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 3 பேரையும் கொலை வழக்கில் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 118

0

0