சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு : விசாரணையில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 4:11 pm
Rohini - Updatenews360
Quick Share

சென்னை : பிரபல திரையரங்கில் இருந்து ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் ரோகிணி திரையரங்கத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் தண்ணீர் தொட்டி உள்ளது.

அந்த தொட்டியில் தண்ணீரை இறக்க லாரி வந்தது. அப்போது தண்ணீர் தொட்டியில் சடலம் மிதப்பதாக லாரி ஓட்டுநர் தகவல் அளித்தார்.

தகவல் அளித்ததை தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர், காவல்துறை மற்றும் கோயம்பேடு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னா அழுகிய ஆண் சலடத்தை கைப்பற்றினர். விசாராணையில் திரையரங்கில் பிளம்பராக, எலக்ட்ரீசியானாகவும் பணியாற்றிய வெங்கடடேச பெருமாள் என்பதும், 42 வயதுடைய அவருக்கு திருமணமாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தண்ணீர் தொட்டியை பராமரித்து வந்த அவர், கடந்த 26ஆம் தேதி கடைசியாக மது அருந்திவிட்டு தண்ணீர் தொட்டியில் உள்ள மோட்டாரை ஆன் செய்ய வந்தஅவர் தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உடல் , முகம் அழுகியுள்ளதால், அவர் அணிந்திருந்த சட்டையை வைத்தும், அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் இறந்தது வெங்கடேச் பெருமாள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்ட போது, அது திரையரங்கில்

Views: - 112

0

0