நடமாடும் நகைக்கடையோ? கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து வந்த வரிச்சியூர் செல்வம் : வியந்து பார்த்த நீதிமன்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2024, 5:51 pm

மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்த வரிச்சியூர் செல்வம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வருகை தந்தார். புதியதாக வாங்கிய சொகுசு காரில் இறங்கிய வரிச்சியூர் செல்வம்.

அவர் எப்போதும் அணிந்திருக்கும் தங்க நகைகளை மாற்றி விட்டு புதியதாக கழுத்தில் முக்கால் கிலோ எடையுள்ள முறுக்கு செயினையும், கை விரல்களில் தங்க சிறுத்தையும் கழுத்தில் தங்க சிங்கமும், தங்க கொம்புடன் கூடிய காளையையும் அணிந்தும் உடம்பெங்கும் தங்க நகையாக ஒரு கிலோ எடையுள்ள நகைகளை அணிந்தபடி நடமாடும் நகைக்கடை போல அணிந்து நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார்.

மேலும் படிக்க: நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியா? தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறிய தகவல்..!

இதனைப் பார்த்த வழக்கறிஞர்களும் பொதுமக்களும் வரிச்சியூர் செல்வத்தை வியப்புடன் பார்த்தபடி நின்றனர்

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!