குடும்பத் தகராறில் மகன், மகளுக்கும் விஷம் கொடுத்த தாய்: சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயிரிழந்த பரிதாபம்…

3 July 2021, 5:33 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே குடும்பத் தகராறில் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலத்தான்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு இவரது மகள் நித்யா (29) இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வரதன்கோன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, நல்லக்கண்ணு என்ற 6 வயது மகளும், ரோகித் என்ற 4 வயது மகளும் உள்ளனர். கணவன் – மனைவிக்கு இடையே அவ்வபோது பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ள நிலையில் நித்யா 4ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து மணப்பாறையில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த 30ம் தேதி கணவன் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், மீண்டும் பிரச்சனை ஏற்படவே மிகுந்த மனவேதனை அடைந்து அங்கிருந்து மீண்டும் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

அதன் பின்னர் மனவேதனையில் இருந்த வந்த நித்யா 1ம் தேதி காலை தனது மகள் மற்றும் மகனுக்கு எலி பேஸ்ட் (விஷம்) கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயக்க நிலையில் இருந்த நித்யாவிடம் குடும்பத்தினர் கேட்ட போது தான் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டு பிள்ளைகளுக்கும் கொடுத்து விட்டதாக கூறியதை அடுத்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை நித்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இன்று  ரோகித்தும், அதன் பின்னர் நல்லக்கண்ணுவும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் 3 பேரும் இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இறந்த நித்யா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில்… அன்புள்ள அப்பாவுக்கு உங்கள் மகள் நித்யா எழுதிக்கொண்டது. இந்த ஜென்மத்தில் உனக்கு மகளாய் பிறந்ததற்கு நான் ரொம்ப புண்ணியம் செய்திருக்கனும். ஆனா எனது வாழ்க்கையில் ரொம்ப வெறுப்பா இருப்பது எனது கல்யாண வாழக்கை தான். எனக்கு மலடினு பேரு வராம பிள்ளைகளை கொடுத்த கடவுள் அதுங்களுக்கு நல்ல அப்பாவை கொடுக்கல. பிள்ளைங்களயும், என்னையும் ரொம்ப வெறுப்பா நினைக்கிற எனது புருஷன் கிட்ட வாழ்றது ரொம்ப கஷ்டம், ஏனா இது எல்லாத்தும் காரணம் என் புருஷனின் அக்கா தான். என்னை கல்யாணம் பண்ணும் போது கல்யாணம் முடிந்த உடன் அங்க வீட்டுக்கு பேயிறுன்னு சொன்னாங்க.

ஆனா போகாம என்னை எவ்வளவு கொடுமை பண்ணமுடியுமோ அவ்வளவு கொடுமை பன்னுனாங்க. என் சாவுக்கு காரணம் என் புருஷனும், அவுங்க அக்காவும் தான். நான் சாவதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனா என் பிள்ளைகள் என்ன பாவம் பண்ணுச்சுங்க. என் பிள்ளைங்க சாவுக்கு ஒரு அர்த்தம் வேணும். அதனால எதுக்காக என்னை சித்ரவதை பண்ணாங்களோ அந்த சொத்தை அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைக்கணும், எங்களை கொன்ற என்ற புருஷனுக்கும், நாங்க போடுற பிச்சை அந்த நிலத்துல வீடு கட்டுறதுக்கு 5 சென்ட் இடம் மட்டும் தான் தரனும் என்று கடிதத்தில் எழுதி இருந்தார்.

Views: - 108

0

0